Saturday, January 02, 2010

பறபற

''கொக்கு பறபற..
கோழி பறபற..
காக்கா பறபற..
குருவி பறபற..''
குழுவினருள்
ஒருவர் சொல்ல சொல்ல
பறப்பனவற்றை குறிப்பதாக
கையை விரித்து
பறப்பது போல
பாவனை செய்கிறோம்..
குறும்பன் ஒருவன்
''முத்தம்  பறபற'' என் சொல்ல
குழுவினர் பறக்கும் அசைவை நிறுத்த
நீயும் நானும் மட்டும்
கையை அசைத்து விட்டிருந்தோம்..
யாருக்குத் தெரியும்?
இரண்டு நாட்களுக்கு முன்னதாக
நீயொரு சாலையின் முனையில்
நின்றபடி பறக்கும்
முத்தத்தை அளித்து சிரித்தும்..
எட்டிப்பிடித்து
நானும் கண்சிமிட்டியதும்..

No comments: