
குறை சொல்லப் போவதில்லை
என்னையும் கூட..
கண்டுபிடித்து விட்டேன்
மகிழ்ச்சி ஒளிந்திருக்கும்
வெள்ளைமாளிகையையும்
அதனுள்ளே நடமாடும்
என்னையும்..
என்னிடமிருந்து நிழலும்
கீழே விழப்போவதில்லை
அதற்கும் விடுதலை
அளித்து அனுப்பிவிட்டேன்..
சிலந்திகள் சில என்னை சுற்றி
எச்சில் வலை பின்னுகின்றன..
என்னை இரையாக்க அல்ல
எனக்கு இரையளிக்க..
தூக்கணாங்குருவிகள்
சில கூடுகள் பரிசளித்தன
நான் விரும்பும் நேரங்களில்
ஓய்வெடுத்து வெளிக்கிளம்ப..
இனி யாரையும் குறை
சொல்லப்போவதில்லை..
எனக்கான யாவும்
கிடைத்து விட்டது
மாபெரும் தேடலுக்குப் பின்
உன்னையும் சேர்த்து..
No comments:
Post a Comment