
தாமதமாய் வந்து
தாளிட்டு ஓசையெழுப்பாமல்
உறங்கிப் போனாய்..
நாளை இரவு
உனக்கு நான்
தேவைப்படாமல் போகலாம்..
அதனால்
இன்றைய இரவு
உன்னை விடுவதாய் இல்லை..
கொட்டிவிடப் போகிறேன்
அத்தனையையும்..
உறங்குமுன்..
ஒதுக்கவோ
ஒத்துக் கொள்ளவோ
உனக்கு உரிமை உண்டு..
எனக்கிருப்பதைப் போல..
அதற்குமுன்
இதழ் பதித்து விடு..
என் நெற்றியில்
நேசத்தின் பிரதிபலிப்பாய்..
அந்த ஈரப்பதத்தில்
துளிர்த்திருக்கும் புது விதை..
ஒருவேளை
வேர்கள் வெட்டப்பட்டால்
அந்த இடத்தை நிரப்ப..
No comments:
Post a Comment