
இன்று சந்தித்தாகி விட்டது..
பெயர்களாக அறியப்பட்டவர்கள்
உருவங்களாகவும்
பதிந்து போயினர்..
ஒருவர் பின் ஒருவராக
ஐவரும் பரிச்சயமானார்கள்..
அவர்களில் ஒருவனை
ஏற்கனவே
பதுக்கி வைத்திருந்தேன்
என் கனவுப் பைக்குள்..
நாளொரு குறுஞ்செய்தியும்
பொழுதொரு பேச்சுமாக
பெருத்து வளர்கிறது
கனவுப்பை..
யார் கண்ணுக்கும் புலப்படாமல்..
No comments:
Post a Comment