
இதயத்தின் அத்தனை
அறைகளையும்
திறந்து காட்டிய பிறகு
சொல்வதற்கு என்ன இருக்கிறது?
உனது முடிவில்
நீ தெளிவாக
இருப்பது போல்
எனது முடிவில் நானும் கூட..
இனி சொல்வதற்கு ஒன்றுமில்லை..
காலத்திடம் பத்திரமாய்
ஒப்படைத்திருக்கிறேன்
என் நேசத்தை
உரிய நேரத்தில்
உன்னிடம் சேர்ப்பிக்கும்
சொல்வதற்கு
நானில்லாமல் போன பின்னும்...
No comments:
Post a Comment