
உன் பாரத்தையெல்லாம்
என்னிடம் இறக்கி வைத்தாய்..
தாங்கிக் கொள்வேன் என..
நானும் முன்னர் நினைக்கவில்லை..
உன் பாரம் சுமக்க
முடியாத அளவுக்கு
கனமுடையதென..
இறக்கி வைத்த
நிமிடத்திலிருந்து
அச்சுமை என்னை அழுத்தி
குருதியும் கண்ணீரும்
என்னிலிருந்து
கசிந்தபடியிருந்தது..
விடிகாலையில்
பதறி மடியில்
ஏந்திக் கொண்டாய்..
எப்போதோ பறந்து
போயிருந்தது..
உள்ளிருந்த உயிர் பறவை..
என் சிறகுகள்
உன் மூச்சுக் காற்றில்
அசைவதை அறியாமல்
உயிர் இருக்கிறதென
தொடர்ந்து முயற்சிக்கிறாய்..
என்னை எழுப்ப..
No comments:
Post a Comment