Saturday, January 02, 2010

நிமிடங்கள்

இதோ வந்து விடுகிறேன் என..
சென்று விடுகிறாய்..
நொடிகள் பொலபொலவென
உதிர்ந்து ..
நிமிடங்கள் அறுந்து விழுகின்றன
இன்னும் வந்த பாடில்லை...
இனி வரமாட்டாய் என.
என் பணிக்கு ஆயத்தமாகிறேன்..
எதிரே வந்து நிற்கிறாய்..
உதிர்ந்த நொடிகளையும்..
அறுந்த நிமிடங்களையும்
கையிலேந்தியபடி.. 

No comments: