Saturday, January 02, 2010

வரப்பு

ஒரே வரப்பில்
எதிரெதிர் திசைகளில் நாம்
யார் முதலில்
விட்டுக் கொடுக்கப் போகிறோமென
வயலில் வேலை செய்பவர்கள்
வேடிக்கை பார்க்க
அப்படியே திரும்பி
என் முன்னே நடந்து செல்கிறாய்..
தொடர்கிறேன் உன்னை..

No comments: