
உன்னை
எனக்குள்ளிருந்து
இறக்கிவிட சொல்கிறாய்
கால் வைத்து நுழைந்திருந்தால்
கோல் வைத்து விரட்டியிருப்பேன்
கண் வைத்தல்லவா
நுழைந்திருக்கிறாய்..
அங்குள்ள அறைகளை
உருட்டியிருக்கிறாய்..
மலர் கொடுத்து வரவேற்றிருந்தால்
காம்போடு கிள்ளி எறிந்திருப்பேன்..
மணம் கொடுத்தல்லவா
வரவேற்றேன்
சுவாசத்தில் ஒளித்து வைத்தேன்..
எதை புறம் தள்ள?
எதை கைக்கொள்ள?