
வாய்த்திருக்கும் ஒரு வாழ்க்கையில்
வாய்த்திருக்கும் சந்தர்ப்பத்தில்
வாய்த்திருக்கும் முழு நேசத்தில்
வாய்த்திருக்கும் மிச்ச ஆயுளில்
வாழ்ந்துவிட துடிக்கிறேன்
வாய் திறந்தே வதைக்கிறாய்..
மௌனத்தாலும் உதைக்கிறாய்
புன்னகைத்தே சிதைக்கிறாய்
மரணக்குழியில் புதைக்கிறாய்
யாவற்றுக்குமிடையில்
கொஞ்சம் நேசத்தையும்
விதைக்கிறாய்..
No comments:
Post a Comment