Thursday, August 12, 2010

நீ இரவு & நான் நிலவு

தூங்கும் முன்பும்
தூக்கத்தின் நடுவிலும்
எழுந்ததும்
குளித்ததும்
சாப்பிட்டதும்
அலுவலகம் செல்லும் முன்பும்
செல்லும் வழியிலும்
சென்ற பின்னும்
வேலையினிடையேயும் 
அலைபேசியை எடுத்துப்
பார்ப்பது வழக்கம்
உன் குறுஞ்செய்திக்கும் 
அழைப்பிற்கும் 
ஏங்கித் தவிக்குமென்
மனதிற்கு ஒரே ஆறுதல்
இன்னும் பத்திரப்படுத்தியிருக்கும்
ஆறு மாதத்திற்கு முன்
உன்னால் அனுப்பப்பட்ட 
‘நீ இரவு & நான் நிலவு’
எனும் குறுஞ்செய்தி.

1 comment:

சு.சிவக்குமார். said...

எனக்கும் இது நேர்ந்திருக்கிறது என்பதால் இந்த கவிதையை என்னால் மிக நெருக்கமாக உணர முடிகிறது. பால்ய கால தோழியின் ஒரு குறுச்செய்தியை (ஒரு வருடத்திற்கு முன்பு வந்தது) பத்திரப் படுத்தியிருந்தேன்.நிகழ்வு கவிதையாகிருக்கிறது..இதையே இன்னும் குறைவான வரிகளில் முயற்சித்துப் பாருங்களேன்....வாழ்த்துக்கள்..