Thursday, August 26, 2010

எனது முதல் மரணம்

உன்னால்
எனது முதல் மரணம்
நிகழ்த்தப்பட்டுவிட்டது
அது ஒரு பருவ காலம்
அழகிய நிலவு நேரம்
நீயும் நானும்
நேசத்தை தங்குதடையின்றி
பகிர்ந்துகொண்டிருந்தோம்
பின்னர் வந்த இரவொன்றில்
பெருக்கெடுத்தோடும்
நேசத்தின் பாதையினை
மாற்றியமைக்க
விரும்புவதாகச் சொன்னாய்
பின்வாங்க மறுத்த நேசம்
கதறியழுதது
சுவாசம் திணறியது
கண்டு கொள்ளாது
திரும்பி நின்றாய்
ஒருவழியாய்
துடிதுடித்து சாகடிக்கப்பட்டதென்
உணர்வுகள்
உணர்வுகள்
சாவதே முதல் மரணம்
எனது முதல் மரணம்
நிகழ்த்தப்பட்டுவிட்டது
உனது சுயநினைவுடன்.

2 comments:

சு.சிவக்குமார். said...

//நேசத்தின் பாதையினை
மாற்றியமைக்க
விரும்புவதாகச் சொன்னாய்//

இது மறுப்பின் நளினமான வெளிப்பாடாக இருக்கிறது...

”சாரி நீங்க தப்பா நினைச்சுண்டேள் நேக்கு அந்த மாதிரியெல்லாம் ஒன்னுமில்லை” அப்படீன்னு சீயான் விக்ரம் சேதுவில் சொல்ற அந்த வசனமும்,மாடுலேசனும் மனசில் வந்து போகுது.......

எவனோ ஒருவன் said...

////உணர்வுகள்
சாவதே முதல் மரணம்
எனது முதல் மரணம்
நிகழ்த்தப்பட்டுவிட்டது
உனது சுயநினைவுடன்.////

எனக்கு பிடித்த வரிகள்