Showing posts with label நீ மிதமாக நான் மிகையாக - இவள் பாரதி. Show all posts
Showing posts with label நீ மிதமாக நான் மிகையாக - இவள் பாரதி. Show all posts

Tuesday, November 10, 2009

கட்டளை

காதல்
என்னைக்
காதலிக்கச் சொல்லி
கட்டளையிட்டால்
தெரிவு செய்வேன்
உன்னை
முதலும் முடிவுமாய்...

Wednesday, September 16, 2009

நீயும் வண்ணத்துப்பூச்சியும்..


எனக்காக
வண்ணத்துப்பூச்சியும்
நீயும்
விழித்திருக்கும்
இந்த இரவு
எத்தனை அழகானது..

Saturday, September 12, 2009

சந்திப்பின் சாட்சியாக.. .


உன்னிடம் பேச வேண்டுமென நானும்
என்னிடம் பேச வேண்டுமென நீயும்
நினைத்துக் கொள்ளும் நிமிடங்களில்
எங்கோ ஒரு செடியில்
ஏதோ ஒரு பூ மலர்கிறது ..
நம் நினைவுகள்
சந்தித்துக் கொண்டதின்
சாட்சியாக ...