Showing posts with label சந்திப்பின் முன்னும் பின்னும். Show all posts
Showing posts with label சந்திப்பின் முன்னும் பின்னும். Show all posts

Friday, February 17, 2012

சந்திப்பிற்கு பின்..


நான் விரும்பிய காதலின்
அத்துணை சாயல்களும் கொண்டு
நான் பார்த்திராத
புதிய சாயலொன்றுடன்
வந்தாய்
என் சாபங்கள் மறைந்து
தேவதையானேன்
உன் சந்திப்பிற்கு பின்..

சந்திப்பின் முன்னும் பின்னும்

சந்திப்பின் முன்னும் பின்னுமான
நிகழ்வுகளை
அசைபோடும் ஒவ்வொரு முறையும்
திகைப்பும் வியப்பும் மேலிடுகிறது
உனக்குள்ளும் எனக்குள்ளும்
நாமறியாமல் துளிர்த்த நேசம்
இன்று விருட்சமாகி நிற்கும் பேரழகைக் கண்டு..